வெள்ளி, 22 ஜூலை, 2011

கஷ்டங்களை வெல்வது எப்படி?

கஷ்டங்களை வெல்வது எப்படி?


* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.


* ஆசிரியரின் வாழ்க்கை முன்மாதிரியாக அமையாமல், மாணவனால் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.

* உன்னுடைய குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். தோல்வி கண்டு துவளக்கூடாது. தோல்வியின் மூலமே நாம் புத்திசாலிகளாகிறோம்.

* உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது. உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.

* இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும் வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

* தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிருந்தால் தீய செயல்கள் தலைகாட்ட வழி ஏற்படாது.

- விவேகானந்தர்





நாள் கணக்கில் சிந்தியுங்கள்


நாள் கணக்கில் சிந்தியுங்கள்


* அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.

* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில்

எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே

நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒரு போதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த

மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.

* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த

மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ,

அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து

நிற்ககூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.

* எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை

உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள்,

நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப்

பொருட்படுத்தாதீர்கள்.

-விவேகானந்தர்

உன்னைப் பற்றியே சிந்திக்காதே!

உன்னைப் பற்றியே சிந்திக்காதே!



* சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல

பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய

முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே

தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.

* சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து

கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது!

நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.

* சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ்

என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி

அவனிடமிருந்து வெளிப்படும்.

* நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது

சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு

ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.

-விவேகானந்தர்

மன உறுதியுடன்

மன உறுதியுடன் இருங்கள்




* ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.

* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.

* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.

* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதி யுடன் இருங்கள்.





விவேகானந்தர்





உலகில் மிக சிறந்த ஆன்மிகவாதி



விவேகானந்தரின் சிந்தனைகள்






உலகத்தை காலடியில் வைக்க..

உலகத்தை காலடியில் வைக்க..




* பிறருடைய தவறைக் காண முயற்சிக்காமல், உங்களுடைய தவறை திருத்திக் கொள்ளுங்கள்.

* பெறாமை, ஆணவம் ஆகியவற்றைத்தூக்கி எறிந்து விட்டு, உன் முழுவலிமையுடனும், அளவற்ற ஆர்வத்துடனும், தொழிற்களத்தில் இறங்கினால் இறைவன் நல்வழி காட்டுவான்.

* தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும் மனிதனுக்கு உறுதியான வெற்றியைத் தரும்.

* ஒவ்வொரு உயிரிலும் தெய்வத்தன்மை இருக்கிறது, உள்ளேயும், வெளியேயும் இருக்கும் உணர்வுகளைக்

கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வத்தன்மையை மலரச் செய்வது தான் ஒருவருக்கு லட்சியமாக இருக்கவேண்டும்.

* அனைத்தையும் பொறுப்பவளாக இருக்கும் பூமிதேவியைப் போன்று, நீங்களும் பொறுமையுடன் இருந்தால் உலகமே உங்கள் காலடியில் அமரும்.

* நம்பிக்கை.. உன்னிடம் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை... இதுவே வெற்றி பெறுவதின் ரகசியம்.

* துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தெய்வீக இயல்பு நம்மிடம் வெளிப்படும்.








நன்றி: தினமலர்